இந்துக்களின் தீபாவளி பண்டிகை நாளான நாளை வியாழக்கிழமை பொது விடுமுறை நாளாக உள்ளது. இதற்கு அடுத்த நாளான வெள்ளிக்கிழமையும் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை சிறப்பு விடுமுறை வழங்கப்படும் நாளுக்கு பதில் நாளாக எதிர்வரும் நவம்பர் 13 ஆம் சனிக்கிழமை பாடசாலைகள் இடம்பெறும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு எதிர்வரும் வெள்ளிக்கிழமை சப்ரகமுவ, ஊவா, மற்றும் மத்திய மாகாணத்திலுள்ள தமிழ் பாடசாலைகளுக்கும் ஆளுநர்களால் சிறப்பு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
Post a Comment