Ads (728x90)

தமிழகத்தில் தமிழர் மறுவாழ்வு முகாம்களிலுள்ள இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசினால் புதிய வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி ஆரம்பித்து வைத்துள்ளார்.

இவ்வீட்டுத் திட்டத்தின் முதற்கட்டமாக 142.16 கோடி இந்திய ரூபா செலவில் 3,510 புதிய வீடுகள் கட்டப்படவுள்ளன. இதனால் தமிழகத்தில் மறுவாழ்வு முகாம்களில் வாழும் 19,046 இலங்கை தமிழர்களின் குடும்பத்தினர் பயன்பெறவுள்ளனர். மேலும் 30 கோடி ரூபா பெறுமதியிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன் மூலம் தமிழகத்தின் 106 முகாம்களில் வசிக்கும் புலம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு வீதி, குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய குடியிருப்புகள் கிடைக்கவுள்ளன.


Post a Comment

Recent News

Recent Posts Widget