2021 ஜூன் மாதம் முதலாம் திகதியில் சாதாரண பதிவு முகவரியில் உள்ளவர்களும் வாக்காளராக பதிவு செய்து கொள்வதற்காக தகுதியை பெறுகின்றனர் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். சொத்துரிமை தொடர்பில் கவனம் செலுத்தப்படமாட்டாது.
வாடகை அல்லது குத்தகை வீடுகள் மற்றும் சட்டவிரோத பதிவாளர்கள் ஏனைய தகுதிகளை பூரணப்படுத்தி இருந்தால் அவர் சாதாரண முகவரியில் வாக்காளராக பதிவு செய்துகொள்ள முடியும். அதற்காக வீட்டு உரிமையாளர்களின் விருப்பம் அல்லது இணக்கம் தேவையில்லை.
வாடகை அல்லது குத்தகை வீடுகள் மற்றும் சட்டவிரோத பதிவாளர்கள் வாக்காளராக பதிவுசெய்வது, பிரஜைகளின் வாக்குரிமையை உறுதிப்படுத்துவதற்கு மாத்திரமாகும் என அறிவிப்பதுடன் இவ்வாறு பதிவு செய்வது சொத்து உரிமை அல்லது நிரந்தர பதிவை உறுதிப்படுத்துவதற்கு அல்ல என்பதை கருத்திற்கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான பிரச்சினை காரணமாக வாக்காளாராக பதிவுசெய்வதற்கு முடியாமல் போனவர்கள் யாராவது இருந்தால் 2021,11,17ஆம் திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல் காரியாலயத்தில் உங்களது கோரிக்கையை சமர்ப்பிக்க முடியும்.
Post a Comment