Ads (728x90)

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்ட மாத்திரையை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த பிரித்தானிய மருத்துவ ஒழுங்குபடுத்தல் பிரிவு அனுமதி வழங்கியுள்ளது.

மெர்க் (MSD) மற்றும் ரிட்ஜ்பேக் பயோதெரபியுட்டிக்ஸ் (Ridgeback Biotherapeutics) நிறுவனங்கள் இணைந்து இந்த மாத்திரையை தயாரித்திருக்கின்றன.

மோல்னுபிராவிர் (Molnupiravir) என பெயரிடப்பட்டிருக்கும் இந்த மாத்திரையை கொரோனா தொற்று அறிகுறிகள் தென்பட ஆரம்பமான தொற்றாளர்களுக்கு முதல் 05 நாட்களில் நாளொன்றுக்கு இரண்டு முறை வழங்க சிபாரிசு செய்யப்பட்டுள்ளது.

உரிய நடைமுறைகளின் பின்னர் குறித்த மாத்திரையை தடுப்பூசி பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்களுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகின் முதல் நாடாக இந்த மாத்திரைக்கு பிரித்தானிய அரசு அனுமதியளித்திருக்கிறது.

மிகவும் பலவீனமான மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடுள்ளவர்களுக்கு இந்த சிகிச்சை ஒரு புரட்சிகரமானது என அந்நாட்டு சுகாதார அமைச்சின் செயலாளர் சாஜித் ஜாவித் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget