யாழ்.மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் இன்று செவ்வாய்க்கிழமை விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்டக் செயலர் க.மகேஸன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் நேற்று இரவு முதல் பெய்த மழை காரணமாக 243 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவானதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்திருக்கின்றது.
இன்று அதிகாலை வெளியான வளிமண்டலவியல் திணைக்களத்தினுடைய அறிக்கையின்படி இன்றும் கூட வட மாகாணத்தில் 150 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ள நிலைமை காரணமாக மாவட்டத்தில் இதுவரை 3,300 குடும்பங்களைச் சேர்ந்த 11,416 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்.மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் கடந்த சில மணித்தியாலங்களில் 200 மில்லி மீற்றர் கன மழை பதிவாகியுள்ளதாக திருநெல்வேலி வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மறு அறிவித்தல் வரும் வரை தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் நாட்டை சூழவுள்ள ஆழம் மற்றும் ஆழம் குறைந்த கடற்பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் குறிப்பாக வடக்கு, வடமத்திய, வட மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் அநுராதபுரம், திருகோணமலை, நுவரெலியா, கண்டி மாவட்டங்களிலும் சில இடங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலிலு தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் 243 மி.மீ. மழைவீச்சியும், அநுராதபுரத்தில் 300 மி.மீ. மழைவீச்சியும், கேகாலையில் 200 மி.மீ. மழைவீச்சியும் பதிவாகியுள்ளது.
Post a Comment