Ads (728x90)

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் வெளிவந்தது.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்பமாகும் க.பொ.த உயர்தரப் பரீட்சை 2022 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 07 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 05 ஆம் திகதி வரையும், க.பொ.த சாதாரணதரப் பரீட்சை மே மாதம் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் 01 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.

நாட்டிலுள்ள சகல பாடசாலைகளுக்கும் 2021 ஆம் ஆண்டு 03 ஆம் தவணை 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி நிறைவடையும். 2022 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா விடுத்துள்ள சுற்றறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான பாடசாலை பரீட்சைகள் நடைபெறும் திகதி மற்றும் அரச பாடசாலைகள் மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் பாடசாலை தவணை முடிவடைவது தொடர்பில் அனைத்து மாகாண பிரதம செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண, வலய மற்றும் பிரதேச கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கும், பிரிவேனாக்களுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 


Post a Comment

Recent News

Recent Posts Widget