Ads (728x90)

இந்த வருடத்தின் ஜனவரி மாதத்தில் 82,327 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சரான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஜனவரி 01 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை நாளாந்தம் 2000 முதல் 3000 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். அதிகபட்சமாக ஜனவரி 05 ஆம் திகதி வந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 3,371 ஆகும்.

ஜனவரி மாதத்தில் ரஷ்யாவிலிருந்து 13,478 சுற்றுலாப் பயணிகளும், இந்தியாவிலிருந்து 11,751 சுற்றுலாப் பயணிகளும், உக்ரைனில் இருந்து 7,774 பேரும் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 7,442 பேரும் வருகை தந்துள்ளனர்.

ஜெர்மனி, பிரான்ஸ், போலந்து, அவுஸ்திரேலியா, மாலைதீவு மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் ஜனவரி மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என அமைச்சர் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget