தலைமையக பொலிஸ் பொறுப்பதிகாரி, அதிபர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்யும்படியும், தாம் உரிய விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் உறுதி அளித்த நிலையில் மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டுள்ளனர். இதனையடுத்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் தலைமையக பொலிஸ் நிலையம் சென்று அதிபர் தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்த போது இது குறித்து உரிய விசாரணைகள் தொடரும் என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கு மாகாண ஆளுனர் சம்பவம் தொடர்பில் விடயங்களை அறிந்து மாவட்ட வலய கல்விப் பணிப்பாளருடன் கலந்துரை யாடி இவ்வாசிரியர் சம்பந்தமான தீர்வு ஒன்று இன்று மாலைக்குள் எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் குறித்த ஆசிரியை வலயக் கல்விப் பணிமனைக்கு சமுகமளிக்க வேண்டுமென பாடசா லைக்கும், ஆசிரியைக்கும் கடிதம் அனுப்பப் பட்டுள்ளதாகத் தெரியவருகிறது.
குறித்த பிரபல பெண்கள் கல்லூரியில் சில வருடங்களுக்கு முன் ஹபாயா விவகாரம் தொடர்பில் எழுந்த பிரச்சினை இன்று மீண்டும் அவ்விவகாரம் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மத்தியில் பூதாகரமாக மாறியுள்ளது.
Post a Comment