91 நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்கும் இக்குளிர்கால ஒலிம்பிக் போட்டியை சீன ஜனாதிபதி ஜிங் பிங் ஆரம்பித்து வைத்தார். இப்போட்டி எதிர்வரும் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
இப்போட்டிகளில் சீனா, அவுஸ்திரேலியா, பிரேசில், அமெரிக்கா, நோர்வே, இங்கிலாந்து, ஜேர்மனி, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட 91 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கின்றனர்.
இறுக்கமான கொவிட்-19 கட்டுப்பாடுகள், மனித உரிமை மீறல்கள் மற்றும் புறக்கணிப்பு குற்றச்சாட்டுகள் மீதான அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில் சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன.
முன்னதாக அமெரிக்கா, பிரித்தானியா, கனடா மற்றும் அவுஸ்ரேலியா ஆகிய நாடுகள் சீனாவின் மனித உரிமைகள் பதிவு குறித்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து, குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு அரசாங்கப் பிரதிநிதிகளை அனுப்பப்போவதில்லை என கூறி புறக்கணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment