Ads (728x90)

வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாடுகளில் கொடுப்பனவு மேற்கொள்ளும் இலத்திரனியல் அட்டை செயலிழந்துள்ளதால், இலங்கைக்கு வருகைதந்து விமான நிலையத்தில் அதற்காக கொடுப்பனவுகளை செலுத்தி விசா பெற்றுக் கொள்ளலாம் என இலங்கை சிவில் விமான சேவை அதிகார சபை தெரிவித்துள்ளது.

இலங்கைக்கு வர விரும்பும் வெளிநாட்டுப் பயணிகள் அந்த நாடுகளில் இருந்து இலத்திரனியல் அட்டை கொடுப்பனவுகள் செயலிழந்துள்ளதால் இலங்கை வந்தவுடன் விமான நிலையத்தில் அந்த கட்டணத்தை செலுத்தி விசாவைப் பெற்றுக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர், பிரான்ஸ் மற்றும் ரஷ்யா உள்ளிட்ட 30 நாடுகளுக்கு இந்த வசதி கிடைக்கும் என சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த நாடுகளின் குடிவரவு, குடியகல்வு விமான நிலையங்கள் மற்றும் வெளிவிவகார அமைச்சுக்களின் அதிகாரிகளுக்கு இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபை இந்த அறிவித்தலை அனுப்பி வைத்துள்ளது.

அதற்கமைய அந்த நாடுகளில் இருந்து இலங்கைக்கு பிரவேசிக்க விரும்பும் பயணிகள் எவ்வித இடையூறும் இன்றி இலங்கைக்கு வர முடியும் என இலங்கை சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget