ஒக்டேன் 92 ரக பெற்றோலின் விலை 07 ரூபாவினாலும், ஒட்டோ டீசலின் விலை 03 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி லங்கா ஐஓசி நிறுவனத்தின் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 177 ரூபாவிலிருந்து 184 ரூபாவாகவும், ஒரு லீட்டர் ஒட்டோ டீசல் 121 ரூபாவிலிருந்து 124 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதவிர 95 ஒக்டென் ரக பெற்றோல் 03 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 213 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது
Post a Comment