Ads (728x90)

2021 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றது.

இப்பரீட்சைக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி. தர்மசேன தெரிவித்துள்ளார்.

இன்று பெப்ரவரி 07 ஆம் திகதி முதல் மார்ச் 05 ஆம் திகதி வரை இப்பரீட்சைகள் நடைபெறவுள்ளன.

இப்பரீட்சைக்கு 345,242 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். அவர்களில் 279,141 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளும், ஏனைய 66,101 பேர் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுமாவர். இப்பரீட்சை 2,437 பரீட்சை நிலையங்களில் இடம்பெறவுள்ளன.

பரீட்சைக்கு விண்ணப்பித்து கொவிட் தொற்றுக்குள்ளான மற்றும் தனிமைப்படுத்தலில் உள்ள பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget