இவ்வாறு மோதல்களைத் தடுப்பதை இலக்காகக் கொண்டு சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற அமைப்பான நெருக்கடி கண்காணிப்புக் குழுவின் செயற்பாட்டாளர் அலன் கீனன் அவரது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
மிகவும் செயற்திறனான முறையிலும், சரியான கருத்தியல் அடிப்படையிலும் இயங்குகின்ற மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களில் அம்பிகா சற்குணநாதன் குறிப்பிடத்தக்க ஒருவர் என்பதை இலங்கை தொடர்பான விவகாரங்களை உன்னிப்பாக அவதானித்து வரும் எவரும் நன்கறிந்திருப்பார்கள். அவ்வாறிருக்கையில் வெளிவிவகார அமைச்சினால் தனிப்பட்ட ரீதியில் அவர்மீது நிகழ்த்தப்பட்டுள்ள தாக்குதல் மூலம் அது மிகத்தெளிவாக நிரூபணமாகியுள்ளது.
தண்டனை வழங்கப்படாத கலாசாரம் இலங்கையில் தொடர்வது பற்றி அம்பிகா சற்குணநாதனால் முன்வைக்கப்பட்ட கருத்திற்கு வெளிவிவகார அமைச்சு மறுப்புத் தெரிவித்திருப்பது நகைப்பிற்குரிய விடயம். உள்ளகப்பொறிமுறை மற்றும் உள்ளகக் கட்டமைப்புக்கள் ஊடாக நல்லிணக்கம், பொறுப்புக்கூறலை உறுதி செய்வதாகத் தொடர்ச்சியாகக் கூறிவரும் அவர்களுடைய கருத்தை அவர்களே புறக்கணிக்கும் வகையிலும் இது அமைந்துள்ளது.
அத்தோடு சிவில் சமூக அமைப்புக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்கு முறைசாராத மற்றும் சட்டத்திற்குப் புறம்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், சிவில் சமூக இடைவெளி சுருங்கி வருவதாகவும் அம்பிகா சற்குணநாதனால் வெளியிடப்பட்ட கருத்திற்கு வெளிவிவகார அமைச்சு மறுப்புத் தெரிவித்திருக்கும் அதேவேளை, அவரது கருத்தியல் தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுறுத்துவதாக மிகமோசமான குற்றச்சாட்டையும் முன்வைத்துள்ளமையை மிகுந்த கரிசனைக்குரிய மாற்று நிலைப்பாடாகவே கருதவேண்டியிருக்கின்றது.
எனவே இலங்கையில் நிலைபேறான சமாதானத்தையும், உறுதிப்பாட்டையும் நிலைநாட்டுவதை முன்னிறுத்திச் செயற்பட்டுவரும் அனைத்து அரசாங்கங்களும், சர்வதேச அமைப்புக்களும் சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதனுக்கு எதிரான வெளிவிவகார அமைச்சின் கருத்தியல் ரீதியான தாக்குதலை வலுவான எச்சரிக்கை சமிக்ஞையாகவே கருதவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment