Ads (728x90)


சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுடன் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வி அடைந்துள்ளதாகவும், பணிப்பகிஷ்கரிப்பை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் சுகாதார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.

ஒன்றிணைந்த சுகாதார தொழிற்சங்கத்தினரால் ஆரம்பிக்கப்பட்ட பணிப்பகிஷ்கரிப்பு இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது. 17 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து இப்பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன.

சம்பள முரண்பாடு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள 3,000 ரூபா  விசேட கடமைக் கொடுப்பனவை 10,000 ரூபாவாக உயர்த்துதல், ஆசிரியர் சேவை சம்பள உயர்வின் மூலம் தாதிய சேவைக்கு ஏற்பட்டுள்ள சம்பள முரண்பாட்டைத் தீர்த்தல், தொழில் வல்லுனர் பட்டதாரிகளுக்கு திருத்தியமைத்த சம்பள அளவுத்திட்டத்தை நிர்ணயத்துடன் தகுந்த பதவி வாய்ப்புகளைக் கிடைக்கச் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget