கல்வியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் ஆசிரிய மாணவர்களிற்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கும் வகையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளிற்கு 355 ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களிற்கான நியமனம் இன்று காலை 9 மணிக்கு கோப்பாய் கல்வியல் கல்லூரியில் வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேனவினால் வழங்கப்படும்.
இவ்வாறு ஆசிரியர் நியமனம் பெற்றவர்கள் எதிர்வரும் 04 ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்க வேண்டுமென அவர் தெரிவித்தார்.

Post a Comment