அரசாங்க மற்றும் தோட்ட, தனியார் துறைகள் அனைத்தும் இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
மக்களின் குரலுக்கு செவிசாய்க்காமல் தன்னிச்சையான பயணத்தை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகின்றது. காலிமுகத்திடலில் போராடும் இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்திற்காக போராடுகிறார்கள்.
ஆட்சியாளர்களை வீட்டுக்குப் போகச் சொல்கிறார்கள். இந்த நாட்டிலுள்ள அனைத்து உழைக்கும் வர்க்கத்தினரும் இணைந்து இந்த பொது வேலைநிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கின்றோம். ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்றைய வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன.

Post a Comment