தொழிற்சங்கத்தினரது பணிப்புறக்கணிப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தோட்ட தொழிற்துறையினரும், விசேட பொருளாதார மத்திய நிலையத்தினதும், சுதந்திர வர்த்தக வலயத்தின் ஊழியர்கள் மற்றும் சேவையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன், போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
துறைமுகம், போக்குவரத்து, பொருளாதார மத்திய நிலையம், தபால், சுதந்திர வர்த்தக வயலம், வங்கி கட்டமைப்பு, மின்சாரம், பெற்றோலியம், சுகாதாரம், புகையிரத சேவை ஆகிய முக்கிய சேவைத்துறையின் கட்டமைப்பு செயலிழந்தால் கொழும்பு மற்றும் கொழும்பு புறநகரினதும் அன்றாட செயற்பாடு முழுமையாக ஸ்தம்பிதமடைந்தது.
ஜனாதிபதி உட்பட முழு அரசாங்கம் ஒருவார காலத்திற்குள் பதவி விலக வேண்டும். பதவி விலகாவிடின் எதிர்வரும் 06 ஆம் திகதி அரசாங்கத்திற்கு எதிராக நாடுதழுவிய ரீதியில் பாரிய ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுப்படுவோம் என தொழிற்சங்கத்தினர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்தனர்.
வைத்தியசாலை கட்டமைப்பு மருந்து பொருட்களின் தட்டுப்பாடு காரணமாக மருத்துவத்துறை பாரிய நெருக்கடியினை எதிர்க்கொண்டுள்ள நிலையில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு பொதுமக்களை பாதிப்பிற்குள்ளாக்க விரும்பவில்லை. கடந்த காலங்களில் தொழில் உரிமைகளை முன்னிலைப்படுத்தி போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் தற்போது பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட முடியாது.
இருப்பினும் அரசாங்கத்திற்கு எதிராக நாட்டு மக்கள் ஒன்றிணைந்து முன்னெடுத்துள்ள போராட்டத்திற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். சேவைக்கு சமூகமளித்த வண்ணம் போராட்டங்களில் ஈடுப்படுவோம் என அரச மருத்துவ சங்கம், தாதியர்சங்கம், இரசாயன ஆய்வு கூட துறைசார் நிபுணர் சங்கத்தின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

Post a Comment