இலங்கை மக்களுக்கு உதவுவதற்கான இந்த தீர்மானத்தை தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த தீர்மானத்தை முன்மொழிந்திருந்தார்.
இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை அண்டை நாட்டு பிரச்சினையாக பார்க்க முடியாது எனவும், ஆட்சியில் யார் இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அவர்களுக்கு உதவ முடியாது எனவும் தமிழக முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
தனியாக தமிழர்களுக்கு மட்டும் உதவிகளை வழங்காமல் அனைத்து இன மக்களுக்கும் வழங்குங்கள் என இலங்கை தமிழ் தலைவர்களும், மக்களும் விடுத்த கோரிக்கையால் தாம் நெகிழ்ந்து போனதாகவும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.
அந்த கோரிக்கைக்கு அமைவாக 123 கோடி ரூபா பெறுமுதியான 40,000 தொன் அரிசி, உயிர்காக்கும் 137 மருந்து வகைகள், குழந்தைகளுக்கான 500 தொன் பால் மா போன்றவற்றை வழங்க தமிழக அரசு முன்வந்துள்ளது.

Post a Comment