Ads (728x90)

அரசிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையானது தற்போதைய அரசாங்கத்தை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் பாராளுமன்ற உறுப்பினர்களை மக்களுக்கு வெளிப்படுத்தும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் எதிர்ப்பு ஊர்வலத்தின் 05 வது நாளான இன்று காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு அதிகாரம் அளிக்கும் முக்கிய திட்டங்களை எதிர்க்கட்சிகள் செயற்படுத்தும். ராஜபக்ச அரசாங்கத்தை அகற்றுவதற்காக அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் சில நம்பிக்கையில்லா பிரேரணைகள் சமர்ப்பிக்கப்படும்.

தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பது போன்ற சூதாட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் பங்கேற்காது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget