Ads (728x90)

ஏப்ரல் மாதத்தின் முதல் மூன்று வாரங்களில் சுற்றுலாப் பயணிகளின் வருகை முந்தைய மாதங்களுடன் ஒப்பிடும் போது பெருமளவில் வீழ்ச்சி கண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இக்காலப்பகுதியில் மொத்தம் 55,590 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். மார்ச் மாத சுற்றுலாப் பயணிகளின் வருகையுடன் ஒப்பிடும் போது மாதத்திற்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கிட்டத்தட்ட 50 சதவீதம் குறைவடைந்துள்ளது.

மார்ச் மாதத்தில் மொத்தம் 106,500 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்குள் வருகைத் தந்துள்ளனர். ஜனவரி 01 முதல் ஏப்ரல் 26 வரையிலான காலகட்டத்தில் மொத்த வருகை 340,924 ஆக இருந்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget