அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் ரமேஷ் பத்திரண ஆகியோருக்கு ஏற்கனவே அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே 13 அமைச்சர்கள் பதவியேற்றுள்ள நிலையில் தற்போது பதவியேற்றுள்ள 6 அமைச்சர்களுடன் புதிய அமைச்சரவையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட 20 அமைச்சர்கள் தற்போது அங்கம் வகிக்கின்றனர்.
இன்று பதவியேற்ற அமைச்சர்கள்:
1. டக்ளஸ் தேவானந்தா - மீன்பிடி அமைச்சர்
2. பந்துல குணவர்தன - போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர், வெகுசன ஊடக அமைச்சர்
3. கெஹெலிய ரம்புக்வெல்ல - நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர்
4. மஹிந்த அமரவீர - விவசாயம், வனஜீவராசிகள் மற்றும் வனவள பாதுகாப்பு அமைச்சர்
5. ரமேஷ் பத்திரண - கைத்தொழில் அமைச்சர்
6. விதுர விக்ரமநாயக்க - புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
7. அஹமட் நசீர் - சுற்றாடல் அமைச்சர்
8. ரொஷான் ரணசிங்க - நீர்ப்பாசனம், விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்

Post a Comment