பெற்றோல் ஒக்டேன் 92 ரூபா 338 இருந்து 420 ரூபாவாகவும், ஒக்டேன் 95 ரூபா 373 ரூபாவிலிருந்து 450 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஒட்டோ டீசல் ரூபா 289 இலிருந்து 400 ரூபாவாகவும், சுப்பர் டீசல் ரூபா 329 இலிருந்து 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
லங்கா ஐஓசி நிறுவனமும் இன்று முதல் இதே அதிகரிப்பின் அடிப்படையில் விலைகளை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
குறித்த விலை அதிகரிப்புகள் எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய அமைச்சரவையின் அனுமதியின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

Post a Comment