Ads (728x90)

ஒருவர் கையிருப்பில் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச வௌிநாட்டு நாணயங்களின் அளவு 15,000 டொலர்களில் இருந்து 10,000 டொலர்களாக குறைக்கப்படும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது.

அந்நியச்செலாவணி சட்டத்தின் கீழ் எவரும் வெளிநாட்டு நாணயங்களை வைத்திருக்கக்கூடிய வரம்பு உள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்தார்.

எனினும் குறித்த 10,000 டொலர்கள் நிதி எவ்வாறு பெறப்பட்டது என்பதற்கான சான்றுகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டார்.

இதன்படி தற்போது வௌிநாட்டு நாணயங்களை வைத்திருப்பவர்கள் அதனை வங்கியில் வெளிநாட்டு நாணயக் கணக்கில் வைப்பீடு செய்ய அல்லது அதனை ஒப்படைத்து ரூபாவாக மாற்றிக்கொள்ள இரண்டு வார கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget