அமைச்சரவை அங்கீகாரம் பெற்று, பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டதுடன் இரட்டை குடியுரிமை கொண்ட நபரின் பாராளுமன்ற உறுப்புரிமை நீதிமன்றினால் நீக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
நாடு என்றுமில்லாத வகையில் மோசமான நெருக்கடிகளை எதிர்க்கொண்டுள்ளது. பொருளாதார நெருக்கடியும்,அரசியல் நெருக்கடியும் தீவிரமடைந்துள்ளது. பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு,அத்தியாவசிய சேவைத்துறையில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண முன்னுரிமை வழங்க வேண்டும்.
அரசியல் ஸ்திரத்தன்மை பேணப்படாவிடின் பொருளாதார நெருக்கடிக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது. அரசியல்வாதிகள் தொடர்பில் மக்கள் மத்தியில் வெறுப்பு நிலை காணப்படுகிறது. மக்களை குறை கூறுவது பயனற்றது. இந்த அரசியல் கலாச்சாரம் இலங்கைக்கு பொருத்தமற்றது.
பாராளுமன்றில் குழு அடிப்படையிலும், கட்சி அடிப்படையிலும் வேறுப்பட்டு குடும்ப ஆட்சியை பாதுகாக்க முயற்சிக்கும் மக்கள் பிரதிநிதிகள், மக்கள் எதிர்க்கொண்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண முன்னுரிமை வழங்காததன் விளைவை தற்போது முழு நாடும் எதிர்க்கொள்கிறது.
எனவே 21ஆவது திருத்தம் ஊடாக 19 ஆவது திருத்தத்தின் ஜனநாயக இலட்சணங்களை மீள செயற்படுத்துவது அத்தியாவசியமானது. அரசியலமைப்பின் 21ஆவது திருத்த சட்டவரைபு தயார் செய்யப்பட்டுள்ளது.
நாளை இடம் பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் திருத்த யோசனை முன்வைக்கப்பட்டு வெகுவிரைவில் நிறைவேற்ற எதிர்பார்த்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Post a Comment