இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட பொருட்களில் 9,000 மெட்ரிக் தொன் அரிசி, 50 மெட்ரிக் தொன் பால்மா, 25 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான மருந்துவகைகள் உள்ளடங்குகின்றன.
தமிழக அரசினால் இலங்கைக்கு வழங்கப்படும் 40,000 மெட்ரிக் தொன் அரிசி, 500 மெட்ரிக் தொன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் அடங்கிய பாரிய உதவித் திட்டத்தின் கீழ் அனுப்பி வைக்கப்படவுள்ள உதவிப் பொருட்களின் முதற்தொகுதியாக இவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இந்த பங்களிப்பானது 5.5 பில்லியன் இலங்கை ரூபாவிற்கும் அதிக பெறுமதியானதாகும்.
இவ்வாறு கையளிக்கப்பட்ட பொருட்கள் எதிர்வரும் நாட்களில் இலங்கை அரசால் வடக்கு, கிழக்கு, மத்திய, மேல் மாகாணங்கள் உள்ளிட்ட இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கஷ்டத்திற்குள்ளான மற்றும் தேவையுடைய பிரிவினருக்கு விநியோகிக்கப்படவுள்ளன.

Post a Comment