Ads (728x90)

நாடு முழுவதும் உடன் அமுலுக்கு வரும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். 

மறு அறிவித்தல் வரும் வரை குறித்த ஊரடங்கு உத்தரவு அமுலாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக கொழும்பு தெற்கு, வடக்கு மற்றும் மத்தி ஆகிய பொலிஸ் பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் பின்னர் மேல் மாகாணம் முழுவதற்குமாக விரிவுபடுத்தப்பட்டது.

அரசாங்க ஆதரவாளர்களுக்கும், அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் இன்று காலிமுகத்திடலில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து குறித்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. 

அலரி மாளிகைக்கு முன்னால் உள்ள மைன கோ கம போராட்ட களம் மற்றும் காலி முகத்திடலில் உள்ள கோட்டா கோ கம போராட்டக் களம் இரண்டின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

Recent News

Recent Posts Widget