இந்நிலையில் ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதேசசபை, நகரசபை உறுப்பினர்கள், தொழிற்சங்கத் தலைவர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகள் மீது நாட்டின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் ஒன்றுதிரண்டு சென்று தாக்குதல் நடாத்தி வரும் நிலையில் நிலைமை மோசமடைந்துள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு சொந்தமான குருணாகலில் உள்ள வீடு ஆர்ப்பாட்டக் காரர்களால் நேற்று இரவு தீ வைத்து எரிக்கப்பட்டது.
ராஜபக்ஷக்களின் மெதமுலனையில் உள்ள பரம்பரை வீடும் தீக்கிரையாக்கப்பட்டது. டி.ஏ. ராஜபக்ஷ ஞாபகார்த்த தூபி உள்ளிட்ட நூதனசாலையும் தகர்க்கப்பட்டுள்ளது.
பிரசன்ன ரணதுங்க, காமினி லொக்குகே மற்றும் சன்ன ஜயசுமன ஆகியோரின் வீடுகளும் தீக்கிரையாக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் ஹோகந்தர பகுதியில் அமைந்துள்ள வீட்டின் மீதும் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதனைவிட முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தனவின் வீடு, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் கண்டி இல்லம் ஆகியனவும் ஆர்ப்பாட்டக்காரர்களின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன் அவ்வீடுகளும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளன.
ஈவ்வாறு நாடு முழுவதும் அமைச்சர்கள் மற்றும் அரசுக்கு ஆதரவான முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை தவிசாளர்கள் உட்பட சுமார் 20 இற்கும் மேற்பட்டவர்களுடைய வீடுகள், வர்த்தக நிலையங்கள், கட்சி அலுவலகங்கள் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
Post a Comment