இதற்கமைய குறைந்தபட்ச கட்டணம் 27 ரூபாவிலிருந்து 32 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டண அதிகரிப்பானது இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் ஆகிய இரு பிரிவைச் சேர்ந்த பேருந்துகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட எரிபொருட்களின் விலை அதிகரிப்பைத் தொடர்ந்து பஸ் உரிமையாளர்களால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமையவும், அமைச்சரவையினால் வழங்கப்பட்ட அனுமதியின் அடிப்படையிலும் இவ்வாறு பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் 19ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட எரிபொருள் விலையேற்றத்தைத் தொடர்ந்து பேருந்து கட்டணங்கள் 35% சதவீதத்தினால் அதிகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment