Ads (728x90)

இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், வருமானம் இன்மையால் ஒரு டிரில்லியன் ரூபா பணத்தை அச்சிட வேண்டியுள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்துள்ளார்.

எங்களிடம் வருமானம் இல்லை. ஒரு டிரில்லியன் ரூபாயை அச்சடிக்க வேண்டும் என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதனால் வருடாந்த பணவீக்கம் எதிர்வரும் மாதங்களில் 40 வீதத்தை தாண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.

நெருக்கடியைச் சமாளிக்க நிதியை மீண்டும் இரண்டு வருட நிவாரண திட்டமாக மாற்றுவதற்கான உள்கட்டமைப்பு திட்டங்களை இடைக்கால வரவு செலவுத் திட்டம் குறைக்கும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதனால் பணவீக்கம் உயரும் என்றும் மேலும் வீதிகளில் போராட்டங்கள் நடத்தப்படலாம், எதிர்வரும் நாட்களில் எதிர்ப்புகள் கடினமான இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். 

நாட்டின் 22 மில்லியன் மக்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உதவ நிதி வழங்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

1948 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்குப் பின்னர் இலங்கை தற்போது மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தள்ளாடிக் கொண்டிருக்கிறது.

வெளிநாட்டு நாணயத்தின் பற்றாக்குறையால் எரிபொருள் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியை கடுமையாகக் குறைந்தது. இது பல மாதங்களாக நாட்டில் எதிர்ப்புகளைத் தூண்டியது.

பொதுமக்களில் பெரும்பாலோர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது குடும்பத்தினர் மீது குறிவைத்து எதிர்ப்புக்களை வெளிப்படுத்தியுள்ளனர். 

தற்போதைய நெருக்கடிக்கு கொவிட்-19 தொற்றுநோய் பரவலும் தாக்கம் செலுத்தியுள்ளது. இது நாட்டின் இலாபகரமான சுற்றுலாத்துறையை சீரழித்ததுடன் வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டுக்கு பணம் அனுப்பும் வீதத்தை குறைத்துள்ளது எனவும் நேற்று ரொய்ட்டர் செய்தி சேவைக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலில் பிரதமர் தெரிவித்துள்ளார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget