Ads (728x90)

பாராளுமன்ற நுழைவு வீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டக்காரர்களை கலைக்க பொலிஸாரினால் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகிக்கப்பட்டது.

பத்தரமுல்லை-தியத்தஉயனவுக்கு முன்பாக உள்ள குறித்த வீதியில் ஆர்ப்பாட்டக்காரர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஆர்ப்பாட்டத்தை தடுக்கும் வகையில் குறித்த வீதியை மறித்து பொலிஸார் நிறுவியிருந்த வீதித்தடையை ஆர்ப்பாட்டக்காரர்கள் அகற்ற முற்பட்ட வேளையில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து பொலிஸாரினால் இவ்வாறு நீரத்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்திற்கு செல்லும் குறித்த வீதியை ஆக்கிரமித்து "ஹொரு கோ கம" என பெயரிட்டு அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தைச் சேர்ந்த மாணவர்கள் அரசாங்கத்திற்கும், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget