Ads (728x90)

சுயாதீனமாக செயற்படுவதாக அறிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்களும், ஆளும் கட்சியும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பது என்ற பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளனர்.

இன்று இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்ததாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

குறித்த ஜனாதிபதியுடன் கலந்துரையாடலில் முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் கலந்து கொண்டதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

மேலும் உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவங்ச உள்ளிட்ட உறுப்பினர்களும் இந்த விடயம் தொடர்பில் பொது நிலைப்பாட்டுக்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.




Post a Comment

Recent News

Recent Posts Widget