வெற்றிடமான பிரதி சபாநாயகர் பதவிக்காக ஶ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் ஆகியோரின் பெயர்கள் முன்மொழியப்பட்ட நிலையில் பாராளுமன்றத்தில் நேற்று இரகசிய வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாக்கெடுப்பில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 148 வாக்குகளையும், இம்தியாஸ் பாக்கிர் மார்க்கார் 65 வாக்குகளையும் பெற்ற நிலையில் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 83 மேலதிக வாக்குகளால் பிரதி சபாநாயகர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment