Ads (728x90)

ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தின் ஒரு உறுப்பினர் மட்டுமே. அவருக்கு பெரும்பான்மை ஆதரவு கிடையாது. இந்த நியமனம் சட்டவிரோதமானது. இது மக்கள் இந்த தருணத்தில் விரும்பும் விடயமல்ல என பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் தெரிவித்துள்ளார்.

மக்கள் அதிகளவு நேர்மையானவரை விரும்புகின்றனர். மக்களால் அதிகாரத்திலிருந்து வெளியேற்றப்பட்டவரை மக்கள் விரும்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மகாநாயக்க தேரர்கள் பக்கச்சார்பற்ற ஒருவரை நியமிக்குமாறு வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு என்ன நடைபெற்றது எனவும் கர்தினால் கேள்வி எழுப்பியுள்ளார்.

தற்போதையை நெருக்கடியிலிருந்து மீண்டு எதிர்காலத்திற்கு நாங்கள் முழு நம்பிக்கையுடன் செல்லவேண்டும் என்றால் முழுமையான அமைப்பு முறை மாற்றம் அவசியம். தற்போதைய அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மூலம் இது சாத்தியமில்லை என கர்தினால் தெரிவித்துள்ளார். பக்கச்சார்பற்ற ஒருவரால் மாத்திரம் இது சாத்தியம் என கர்தினால் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget