அவசரகாலச் சட்டத்திற்கு அமைய பிடியாணையின்றி கைது செய்தல், 48 மணி நேரத்திற்கு நீதிமன்றில் ஆஜர்படுத்தாமல் தடுத்து வைத்தல், எந்தவொரு இடத்திலும் நுழைந்து சோதனை செய்தல், சட்டங்களை இடைநிறுத்துதல், நீதிமன்றத்தினால் கேள்வி கேட்க முடியாத உத்தரவுகளைப் பிறப்பிப்பதற்கும் பொலிஸாருக்கு அதிகாரமளிக்கப்படுகிறது.
இலங்கையில் மீண்டும் அவசரகாலநிலை பிரகடனம்!
நாடு தழுவிய ஹர்த்தால் மற்றும் பாராளுமன்றத்திற்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மை உள்ளிட்ட விடயங்களை காரணம் காட்டி நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியால் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Post a Comment