இதனை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின் பாராளுமன்றக்குழு, தேசிய நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கான இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் பரிந்துரைகளை ஏற்று தேசிய வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
இதற்கமைவாக மக்களின் பாரிய பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்கவும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த யோசனைகளின் அடிப்படையில் இந்த நெருக்கடியைத் தீர்ப்பதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணி தனது ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளது.
Post a Comment