Ads (728x90)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் காலி முகத்திடலில் புகுந்து தாக்குதல் நடத்திய நிலையில் இரு தரப்புக்குமிடையிலான மோதல் மற்றும் பொலிஸாரின் கலகம் தடுக்கும் முயற்சியினால் காலிமுகத்திடல் கலவர பூமியாக மாறியுள்ளது.

அமைதியான முறையில் காலிமுகத்திடலில் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள் மீது இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

கலவரத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த் தாரை பிரயோகத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளது. தற்போது காலிமுகத்திடல் பகுதியில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

 ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்களை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தியதை அடுத்து அவர்கள் பேரவாவிக்குள் பாய்ந்து போராட்டக்காரர்களிடம் இருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இன்று காலை முதல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் கொழும்பில் உள்ள ‘மைனா கோ கம’ மற்றும்  ‘கோட்டா கோ கம’ ஆகிய இரு அரசாங்க எதிர்ப்பு போராட்ட தளங்களையும் அழித்தமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment

Recent News

Recent Posts Widget