Ads (728x90)

யாழ்ப்பாண கல்வி வலயப் பாடசாலைகள் அனைத்தும் இன்று முதல் தளர்வில்லாமல் வழமைபோன்று இயங்கும் என்று பாடசாலை அதிபர்களுக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்துள்ளார்.

இது குறித்து யாழ்ப்பாண வலய நகர்புற பாடசாலைகளின் அதிபர்களுடன் கலந்துரையாடிய பின்னர் அவர்களின் ஏகோபித்த முடிவாக கல்விச் செயல்பாட்டில் தளர்வில்லாமல் பாடசாலைகளை நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

தேவையான வகுப்புக்களை நேரடியாகவும், ஏனய மாணவர்கள் சூம் செயலி மூலமாகவும் கல்வி வழங்கவும், அதனை தீர்மானிக்கும் பொறுப்பையும் அதிபர்கள் ஏற்றுள்ளனர். இதேபோன்று ஏனய பாடசாலைகளும் மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் செயல்பாட்டை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வலயக் கல்விப் பணிப்பாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.

பாடசாலைகள் மூடப்படாது கல்வி வழங்கப்படவேண்டும், பிரதான பரீட்சைகளை எதிர்நோக்கும் மாணவர்களுக்கு நேரடியாக வகுப்புக்கள் நடத்தப்படல் வேண்டும், சூம் மூலமான கற்றல் செயற்பாட்டில் ஏனைய மாணவர்களுக்கான இணைக்கப்படல் வேண்டும், ஆசிரியர் வருகை நேரம் தொடர்பிலும் தரித்திருந்து கற்பிக்கும் காலம் தொடர்பிலும் தளர்வுப்போக்கை கடைப்பிடிக்கலாம், இது ஒரு சமூகப்பொறுப்பு என்பதை உணர்ந்து செயல்படல் வேண்டும் எனவும் கேட்டுள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget