Ads (728x90)

ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி அமைச்சின் லோட்டஸ் வீதியிலுள்ள நுழைவாயில்களை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 21 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்கு ஒருவரும், 4 பெண்களும், 16 ஆண்களும் இதன்போது கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிதி அமைச்சு மற்றும் திறைசேரிக்கு பயன்படுத்தப்படும் இரண்டு நுழைவாயில்களை ஆர்ப்பாட்டகாரர்கள் மறித்துள்ளதுடன், அந்த நுழைவாயில்களுக்கு முன்பாக சிறிய கூடாரங்களை அமைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமையால், அத்தியாவசிய சேவைகளுக்கு சென்ற அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் பின்னர் குறித்த இடத்தில் இலங்கை இராணுவத்தின் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


Post a Comment

Recent News

Recent Posts Widget