இந்நிலையில் பொதுமக்கள் தங்கள் பிரதேச செயலக பிரிவுகளில் மட்டும் எரிபொருள் கொள்வனவு செய்ய முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டத்தில் உள்ள எரிபொருள் பிரச்சனையை தீர்ப்பது தொடர்பில் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற கூட்டத்திலேயே பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது.
அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்ற குறித்த கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதன், பிரதேச செயலர்கள், வடக்கு பிராந்திய பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் முகாமையாளர் மற்றும் பெற்றோலிய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்திலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தத்தம் பிரதேச செயலகங்களின் பொறுப்பில் செயற்படும். நாளாந்த கையிருப்பு தகவல்கள் பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் நேரடியாக சேகரிக்கப்படும்.
இதற்கான அபிவிருத்தி உத்தியோகத்தர்களை பிரதேச செயலாளர் நியமிப்பார். பிரதேச செயலகங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கான விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். பங்கீட்டு அட்டை முறை அறிமுகம்.
ஜூலை 01 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வருகிறது. அதன்படி மக்கள் தமது வதிவிட பிரதேசத்தில் உள்ள ஒரு எரிபொருள் நிரப்பு நிலையத்தை தெரிவு செய்து அங்கு மாத்திரமே எரிபொருளை பெறும்வகையில் பொறிமுறை உருவாக்கப்படும்.
Post a Comment