Ads (728x90)

வெளிநாட்டில் தொழில் புரிவதற்கோ அல்லது வேறு பயன்மிக்க பணிகளில் ஈடுபடுவதற்காகவோ அரச உத்தியோகத்தர்களுக்கு சம்பளமற்ற வெளிநாட்டு விடுமுறையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

கல்வி அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக அரச உத்தியோகத்தர் ஒருவர் தனது பணிக்காலத்தில் உயர்ந்தபட்சம் 5 வருடங்கள் சம்பளமற்ற விடுறையை வழங்குவதற்கு தற்போது ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறித்த காலப்பகுதியில் ஓய்வூதியக் கணிப்பைக் கருத்தில் கொள்ளாமை, சிரேஷ்டத்துவத்தை பாதிக்கின்றமை மற்றும் ஏனைய நிபந்தனைகளால் அரச உத்தியோகத்தர்கள் அவ்வாறான விடுமுறையைப் பெறுவதில் ஆர்வம் காட்டுவதில்லை.

ஆனால் நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு, அரச உத்தியோகத்தர்களுக்கு வெளிநாட்டு வேலைநாடுகளில் தொழில் புரிவதற்கோ அல்லது வேறு பயனுறுதி வாய்ந்த பணிகளில் ஈடுபடுவதற்காகவோ அவர்களின் சிரேஷ்ட்டத்துவம் மற்றும் ஓய்வூதியத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையில் தற்போதுள்ள ஏற்பாடுகளில் திருத்தம் செய்யப்பட்டு குறித்த சுற்றறிக்கையில் ஆலோசனைகளை வெளியிடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget