இதற்கமைய எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் மேற்படி விடுமுறை திட்டம் நடைமுறைக்கு வரும் என அமைச்சர் திணேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கல்வி, சுகாதாரம், நீர், மின்சாரம், பாதுகாப்பு சேவைகள், போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளை வழங்கும் அரச நிறுவன ஊழியர்களை தவிர ஏனைய அரச ஊழியர்களுக்கு அடுத்த 3 மாதங்களுக்கு இந்த விடுமுறை வழங்கப்படுகிறது.
தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பயணிகளின் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
Post a Comment