குருந்தூர் மலைப்பகுதியில் மதம் சார்ந்த எவ்வித கட்டுமானங்களையும் மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றம் ஏற்கனவே தடை விதித்துள்ளது.
இந்தநிலையில் குறித்த தடையையும் மீறி அங்கு அமைக்கப்பட்டுள்ள விகாரை ஒன்றில் புத்தர் சிலையினை நேற்று பிரதிஷ்டை செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில் குறித்த செயற்பாட்டிற்கு எதிராக அங்கு பிரதேச மக்களால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் புத்தர்சிலையை பிரதிஷ்டை செய்வதற்கான பணிகள் இடைநிறுத்தப்பட்டது.
Post a Comment