Ads (728x90)

இன்று நள்ளிரவு முதல் எதிர்வரும் ஜூலை  10 ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவைக்கு மட்டும் எரிபொருளை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய துறைமுகம், சுகாதாரம், பாதுகாப்பு, மின்சாரம், ஏற்றுமதி தொழிற்துறை உள்ளிட்ட துறைகளுக்கு மாத்திரம் குறித்த காலப்பகுதியில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் தனியார் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படமாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget