Ads (728x90)

இலங்கை முதலீட்டு சபை நிறுவனங்களில் பணிபுரியும் வெளிநாட்டவர்களுக்கு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா 05 வருட தொழில் விசா வழங்கும் வேலைத்திட்டத்தை நேற்று ஆரம்பித்து வைத்தார்.

முதலீட்டாளர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணலாம். 

இலங்கையில் இருக்கும் வெளிநாட்டு நிறுவனங்களின் உரிமையாளர்கள், அதில் பணி புரியும் பதவி நிலையில் இருக்கும் ஊழியர்களுக்கான விசா காலத்தை 05 வருடங்களுக்கு ஒரேதடவையில் வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

முதலீட்டாளர்களை சந்தோசப்படுத்துவதன் மூலமே மேலும் அதிகமான முதலீட்டாளர்களை நாட்டுக்கு அழைத்துவர முடியும். அவர்களுக்கு அதிக சந்தர்ப்பம் வழங்குவதன் மூலம் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணலாம் எனவும் தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget