தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதாகக் கூறிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் நாட்டின் தேசிய பாதுகாப்பை முற்றாக ஒழித்து விட்டது.
இராணுவத்தின் ஆட்சியையே இவர்கள் தேசிய பாதுகாப்பாகக் கருதினார்கள். தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட காரணிகளான பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், விவசாயம் ஆகிய துறைகளை தேசிய பாதுகாப்பாக இவர்கள் கருதவில்லை என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இதனால் உலகளவில் ஏழ்மையான நாடுகளில் இலங்கையும் இடம் பிடித்துள்ளது எனவும் கூறினார்.
இப்படியான ஆட்சியாளர்களுடன் ஒருபோதும் பங்காளிகளாக இணைந்து ஆட்சியை அமைக்க போவதில்லை எனவும், அவ்வாறு செய்தால் நாட்டு மக்களின் போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பது ஆகிவிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment