Ads (728x90)

நாட்டில் 4 ஆவது கொவிட் அலை பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

பொது இடங்களில் முகக்கவசம் அணிவதைக் கட்டயாமாக்குதோடு கொவிட்  தொழிநுட்பக் குழுவின் பரிந்துரைகள் மீள நடைமுறைபடுத்துங்கள் என மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஹரித அலுத்கே கருத்து தெரிவித்துள்ளார்.

ஓமிக்ரோன் உலகளாவிய ரீதியில் பரந்த அளவில் பரவியுள்ளது. தற்போது இந்தியா மற்றும் சீனா உட்பட உலகின் பல்வேறு நாடுகளில் பரவும் வீதம் அதிகரித்துள்ளது.

எனவே நிலைமையை கட்டுப்படுத்த மீண்டும் முகக்கவசம் அணிவதற்கும், தொழில்நுட்ப பரிந்துரைகளைப் நடைமுறைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப குழுவை மீள அழைக்குமாறு கோரிக்கை விடுக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடியால் மற்றொரு கொவிட் அலையினை கட்டுப்படுத்த முடியாது போகும். எனவே புதிய கொவிட் திரிபுகளின் பரவலைக் கட்டுப்படுத்த முகக்கவசங்களை தொடர்நது அணிவதோடு நான்காவது கொவிட் தொற்று தடுப்பூசியை விரைவில் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம் எனவும் தெரிவித்துள்ளார்.





Post a Comment

Recent News

Recent Posts Widget