Ads (728x90)

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவை இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களிற்காக கைது செய்யவேண்டும் என கோரும்  குற்றவியல் முறைப்பாடொன்றை சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான அமைப்பு சிங்கப்பூர் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் கையளித்துள்ளது.

2009 இல் கோத்தபாய ராஜபக்ச  இலங்கையின் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றியவேளை பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டார் என மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தும் சர்வதேச அமைப்பான உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.

2009 இல் இடம்பெற்றதாக குற்றம் சாட்டப்படும் மனித உரிமை மீறல்கள்  குறித்து சர்வதேச நியாயாதிக்கத்தின் அடிப்படையில் சிங்கப்பூரில் விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என தென்னாபிரிக்காவை தளமாக கொண்ட அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.


இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கோத்தபாய ராஜபக்ச சிங்கப்பூரிற்கு தப்பியோடியுள்ள நிலையில் அங்கு அவரை விசாரணைக்கு உட்படுத்தமுடியும் என சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget