பேருந்து தொழிற்சங்கங்கள் கோரிய 40 ரூபா ஆகக்குறைந்த கட்டணம் மற்றும் 30 சதவீத பேருந்து கட்டண அதிகரிப்பு உள்ளிட்ட பேருந்து கட்டண திருத்தம் தொடர்பான பரிந்துரையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு போக்குவரத்து அமைச்சிடம் நேற்று சமர்ப்பித்திருந்தது.
போக்குவரத்து அமைச்சின் முன்மொழிவுக்கமைய 22 சதவீதத்தினால் பேருந்து கட்டணங்களை அதிகரிக்கவும், குறைந்த கட்டணத்தை 40 ரூபாவாக அதிகரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இதுவரை 32 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 40 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது இந்த வருடத்தில் மேற்கொள்ளப்பட்ட நான்காவது முறையான கட்டண அதிகரிப்பாகும்.
எரிபொருளின் விலையேற்றத்தினாலேயே இந்த கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் நிலான் மிராண்டா தெரிவித்துள்ளார்.
Post a Comment