Ads (728x90)

காங்கேசன்துறைக்கும் முறிகண்டிக்கும் இடையில் யாழ்.ராணி புகையிரத சேவை இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகிறது என யாழ். புகையிரத நிலைய தலைமை அதிபர் ரி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறைக்கும் முறிகண்டிக்கும் இடையே குறுகிய தூர பயணிகள் புகையிரத சேவை இன்று திங்கட்கிழமை காலை 6.40 மணியளவில் யாழ்.புகையிரத நிலையத்திலிருந்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுகின்றது.

காங்கேசன்துறை – முறிகண்டி இடையே அனைத்து தொடருந்து நிலையங்களிலும் நிறுத்தப்பட்டு பயணிகள் சேவையில் யாழ்.ராணி தொடருந்து தனது சேவையை தொடரவுள்ளது. தினமும் இரண்டு சேவைகள் இடம்பெறவுள்ளன.

காங்கேசன்துறையிலிருந்து முறிகண்டி நோக்கி காலை 06 மணிக்கு சேவை ஆரம்பிக்கப்படுவதுடன், கிளிநொச்சியிலிருந்து காங்கேசன்துறை நோக்கி முற்பகல் 10 மணிக்கு சேவை ஆரம்பிக்கப்படும்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சிக்கு ஒரு வழிக் கட்டணமாக மூன்றாம் வகுப்புக்கு 90 ரூபாய் கட்டணமும், யாழ்ப்பாணத்திலிருந்து பளைக்கு 60 ரூபாயும், யாழ்ப்பாணத்திலிருந்து கொடிகாமத்துக்கு 35 ரூபாயும் கட்டணம் அறவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget