நாட்டை விட்டு செல்வற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்ற முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ மக்களின் எதிர்ப்பிற்கு மத்தியில் அங்கிருந்து திரும்பிச் சென்றுள்ளார்.
விமான நிலையத்திற்குள் பசில் ராஜபக்ஸ சென்ற போது அங்கிருந்த பெருந்திரளான பயணிகள் தமது எதிர்ப்பை வௌியிட்டனர்.
குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்கள் நாட்டிலிருந்து வௌியேறுவதற்காக பட்டுப்பாதை பிரமுகர் நுழைவாயிலை பயன்படுத்துவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதன் காரணமாக, அந்த பகுதியில் சோதனை நடவடிக்கையிலிருந்து விலகியுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.கணுகல தெரிவித்துள்ளார்.
Post a Comment